வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 25 நவம்பர் 2014 (10:37 IST)

ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் தொடங்கியது முதல்கட்ட வாக்குப் பதிவு

ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே, நடைபெற்று வருகிறது.
 
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 87 தொகுதிகள் உள்ளன. அவற்றுள் முதல்கட்டமாக 15 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகின்றன.
 
இதில் 123 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 லட்சத்து 81 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 1,787 வாக்கச்ச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 199 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 33 லட்சத்து 56 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக 3,939 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
தேர்தலையொட்டி, இரண்டு மாநிலகங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.