வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (14:21 IST)

பிரபல அரசியல்வாதி மற்றும் நடிகையை நிராகரித்த விமான நிறுவனம்

2014 ஆம் ஆண்டு கேபினட் மந்திரியாக பதவி ஏற்றவர் ஸ்மிருதி இரானி தற்போது, ஜவுளி துறை அமைச்சராக இருக்கிறார்.


 


இந்நிலையில், டெல்லியில், இந்திய விமானப் பயணிகளின் சங்கம் ஏற்பாடு செய்த, ஜெட் ஏர்வேஸ் அதிகாரபூர்வ நிகழ்ச்சியில், ஸ்மிருதி இரானி கலந்துக்கொண்ட விருதுகள் வழங்கினார்.

அப்போது, பேசிய அவர், ”நான் முதல் முதலாக ஜெட் ஏர்வேஸில் அறை குழு உறுப்பினர் பணிக்கு தான் விண்ணப்பித்தேன். ஆனால், அவர்கள் எனக்கு ஆளுமை திறமை இல்லை என கூறி என்னை நிராகரித்தனர். அவர்கள் என்னை நிராகரித்ததற்கு நான் இப்போது நன்றி தெரிவுத்துக்கொள்கிறேன்” என்றார்.

தற்போது, 40 வயதாகும் ஸ்மிருதி இரானி, அரசியலில் நுழைவதற்கு முன்பு, அழகு அலங்கார அணிவகுப்பில் பங்கேற்றுள்ளார், தொலைக்காட்சி தொடர்களை தயாரித்தும் நடித்தும் உள்ளார் என்பது கூறிப்பிடத்தக்கது.