செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீர்மணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 25 பிப்ரவரி 2015 (17:09 IST)

சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி குமாரசாமியின் சரமாரி கேள்விகளில் திணறிப்போன பவானி சி்ங்

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் சரமாரி கேள்வியால் பதில் அளிக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கின் வாதம் இன்று காலை தொடங்கியது.
 
இந்த வாதத்தின்போது நீதிபதி, ஜெயலலிதா வங்கிக் கணக்கிலிருந்து மற்றவர்களுக்கு பணப்பரிவர்த்தனை நடந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றும், எந்தெந்த தேதியில் எவ்வளவு பண பரிவர்த்தனை நடந்தது என்பதற்கு விளக்கம் தாருங்கள் என்ற பவானி சி்ங்கிடம் கேள்வி எழுப்பினார்.
 
மேலும், சசிகலா உள்பட 3 பேர் ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவா? என்றும் வினா எழுப்பினார்.
 
நீதிபதி குமாரசாமியின் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார்.