வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 16 ஏப்ரல் 2015 (12:09 IST)

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு குமாரசாமி கடிதம்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.
 
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்துவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்தத் கடிதத்தில், தற்போது உடனடியாக தீர்ப்பு வழங்கவும், இறுதி வடிவம் கொடுக்கவும் முடியாத நிலையில் உள்ளது, என்றும் தீர்ப்பு வழங்க நாளையுடன் கால அவகாசம் முடிவடைவதால், இறுதி தீர்ப்பு வழங்க ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அதாவது மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிபதி குமாரசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
 
குமாரசாமியின் கோரிக்கை குறித்து நாளை முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.