1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (15:09 IST)

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: 6 நிறுவனங்கள் பதில் மனு தாக்கல்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசுக்கு எதிராக லெக்ஸ் பிராபர்டீஸ் உள்பட 6 நிறுவனங்கள் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
 
கர்நாடக அரசு ஜெயலலிதாவிற்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கை  மேல்முறையீட்டு செய்தது. இந்த மனுவிற்கு பதில் மனுவை லெக்ஸ் பிராபர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள்  உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளன.
 
அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பை அந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
 
மேலும் கர்நாடக அரசு உள்நோக்கத்துடன் மேல்முறையீட்டு மனுவைதாக்கல் செய்துள்ளதாகவும், அந்த 6 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
இந்நிலையில் அந்த நிறுவனங்களின் மனுவிற்கு கர்நாடக அரசு ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், லெக்ஸ் பிராபர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களும் போலியானவை என்று கூறி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.