1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (07:24 IST)

ஜெ. மோடி சந்திப்பு அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையா: விளக்குகிறார் மத்திய அமைச்சர்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக நலனுக்கான 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார்.


 
 
இந்த சந்திப்பின் போது அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதா என்பதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார்.
 
பிரதமருடனான முதல்வரின் சந்திப்பு முடிந்த உடன் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சிதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா இடையேயான சந்திப்பில் அரசியல் ஏதும் இல்லை எனவும் பாஜக மற்றும் அதிமுக இடையே எந்த அரசியல் கூட்டணி குறித்தும் பேசவில்லை எனவும் கூறினார்.
 
வருங்காலத்தில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி ஏற்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்க பதில் அளித்த அமைச்சர், நாட்டின் நலன் கருதி நாங்கள் அனைத்து கட்சியினருடனும் மிகவும் சுமுகமான உறவை பேணுவதில் அக்கறை காட்டுகிறோம். அந்த வகையில் தான் இன்றைய சந்திப்பும் அமைந்துள்ளது என்றார்.