வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Updated : திங்கள், 27 ஜூலை 2015 (21:06 IST)

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு நோட்டீஸ்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச  நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. .

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், ஆர்.கே. அகர்வால் உத்தரவிட்டனர். மேலும் 4 பேரும் பதில் மனுதாக்கல் செய்த பிறகு திமுக, கர்நாடகாவும் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வழக்கில் தொடர்புடைய நான்கு நிறுவனங்களும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் | சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு நோட்டீஸ்