இங்க சும்மா இருக்கறதுக்கு பேசாம சைனா போய்ரலாம்: நமோ மீது சு.சுவாமி அதிருப்தி!

Last Modified வெள்ளி, 5 ஜூலை 2019 (09:32 IST)
மோடி என்னிடம் பொருளாதாரம் தொடர்பான எனது ஆலோசனைகளை கேட்பதில்லை எனவே நான் சீனா செல்கிறேன் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 
 
பாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துபவர். அதேபோல், அவர் பாஜகவில் இருந்தாலும் பாஜகவை சில சமயம் விமர்சிக்கவும் தவறியதில்லை. 
 
இந்நிலையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி என் ஆலோசனைகளைக் கேட்காத நிலையில் இங்கு இருப்பதற்குப் பதிலாக சீனாவுக்குப் போய்விடலாம் என நினைக்கிறேன் என கூறியுள்ளார். 
swamy
இது குறித்து அவர் விவாக தெரிவித்துள்ளதாவது, சீனாவின் புகழ்பெற்ற சிங்குவா பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் மாதம் ’சீனாவின் பொருளாதார மேம்பாடு: கடந்த 70 ஆண்டுகளின் மதிப்பாய்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளது. 
 
இந்த கருத்தரங்கில் ஏராளமான பொருளாதார அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். அதில் உரையாற்றுவதற்கு என்னை அழைத்துள்ளார்கள். பொருளாதாரம் தொடர்பான எனது ஆலோசனைகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்கத் தயாராக இல்லை. எனவே நான் பேசாமல் சீனாவுக்கே போய்விடலாம் என நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :