1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

பிரதமர் பதவிக்கு போட்டிய? நிதின்கட்காரி விளக்கம்

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழகம் தவிர நாடு முழுவதும் மோடி அலை அடித்து அதில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் ஐந்தே வருடங்களில் மோடியின் பெயர் டோட்டலாக டேமேஜ் ஆகிவிட்டதாகவும், அதனால் வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மாற வாய்ப்பு இருப்பதாகவும் ஒருசிலர் கூறி வருகின்றனர்
 
குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். நிர்ப்பந்தம் காரணமாக பிரதமர் வேட்பாளராக நிதின்கட்காரி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்று நிதின்கட்காரி மறுத்துள்ளார்.
 
இன்று 'இந்தியா டுடே' நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின்கட்காரி பிரதமர் பதவிக்கான பந்தயத்தில் தான் கிடையாது என்றும்,  பிரதமர் நரேந்திர மோடி தான் தேர்தலுக்குப் பின்னரும் பிரதமராக இருப்பார் என்றும், நாட்டுக்கு சேவை ஆற்றுவது, பிரதமர் மோடிக்கு பக்கபலமாக இருப்பது மட்டுமே தனது எண்ணம் என்றும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
 
இருப்பினும் தேர்தல் நேரத்தில் பிரதமர் வேட்பாளர் மாற வாய்ப்பு இருப்பதாக பாஜக தலைவர்கள் சிலரே கூறி வருகின்றனர். இது உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்