செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 11 மார்ச் 2017 (20:33 IST)

தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன்: ஐரோம் ஷர்மிளா

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த ஐரோம் ஷர்மிளா இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார்.



 

 
மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐரோம் ஷர்மிளா, ஆண்மையில் போராட்டத்தை கைவிட்டார். அரசியலில் இறங்க முடிவு செய்த ஐரோம் ஷர்மிளா, தனிக்கட்சி தொடங்கிய மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் இபோபி சிங்கை எதிர்த்து தவுபால் தொகுதியில் போட்டியிட்டார்.
 
90 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதையடுத்து இவரது தோல்வி நாடு முழுவதும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
தேர்தலில் தோல்விடைந்ததால் நான் வெட்கப்படவில்லை. ஆனால் தேர்தல் சலித்துவிட்டதால், எதிர்காலத்தில் போட்டியிட மாட்டேன். அதேசமயம் எனது கட்சியான மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி உயிர்ப்புடன் செயல்படவேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.