1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2019 (08:00 IST)

ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவன பங்கு வெளியீடு: கோடிக்கணக்கில் குவிந்த விண்ணப்பங்கள்

ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தின் பங்குகளை வாங்க கோடிக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தின் பங்குகள் வெளியிடவிருப்பதாக செய்திகள் வெளிவந்ததும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 112 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக செய்தி  வெளிவந்துள்ளது.

இந்திய ரயில்வேயின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவைப்படும் நிதிக்காக ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், 12.6 சதவீத பங்குகளை பொதுப்பங்காக வெளியிட முடிவு செய்தது. இதபடி ஒரு பங்கின் விலை, 315 - 320 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, 2.01 கோடி பங்குகள், 10 ரூபாய் முகமதிப்பில் வெளியிடப்பட்டன.

இந்த பங்குகள் விற்பனை மூலம், 645 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில் பங்குகள் வாங்கும் வாய்ப்பு, நேற்றுடன் முடிவடைந்தது. அக்டோபர் 9ம் தேதி, பங்குகள் ஒதுக்கப்படலாம் என் தெரியவந்துள்ள நிலையில் அக்டோபர் 14ம் தேதி முதல் இந்நிறுவன பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது