1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2019 (20:30 IST)

’20 லட்சம் குடும்பங்களுக்கு’ இலவச இண்டர்நெட் வசதி :மக்கள் ஹேப்பி !

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் சுமார் 20 லட்சம் குடும்பங்களுக்கு இணையதள வசதி வழங்க கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகிறது.
இதுகுறித்து கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது ;
 
கேரள மாநிலத்தில் இணையதள இணைப்பு அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க்குக்காக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அதன்மூலம் ரூ. 1548 கோடி மதிப்பில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக இணையதளா வசதி அளிக்கப்பட உள்ளது.
 
மேலும் இந்த திட்டமானது வரும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அமைச்சரின் இந்த பதிவு அம்மாநில மக்களுக்கும்,மாணவர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறிவருகின்றனர்.