இன்ஸ்டாகிராம் புகைப்படத்தால் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

Instagram
Prasanth Karthick| Last Modified புதன், 11 டிசம்பர் 2019 (18:55 IST)
மும்பையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்ட இளைஞரை காரில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் 22 வயது வாலிபர் ஒருவர் மும்பையில் உள்ள பிரபல விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். அப்போது செல்பி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் தங்கியிருக்கும் ஹோட்டல் பெயரோடு பதிவு செய்துள்ளார். அந்த வாலிபரை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் நான்கு இளைஞர்கள் அவரை ஹோட்டலில் வந்து சந்தித்துள்ளனர்.

பிறகு மிகவும் நட்பாக பேசியபடி பைக்கில் ரைட் செல்லலாம் என அழைத்து சென்றுள்ளனர். பிறகு மும்பை விமான நிலையம் அருகே ஒரு காரில் அந்த வாலிபரை ஏற்றி கொண்டு சென்றவர்கள் காருக்குள் வைத்து கூட்டாக பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். பிறகு ஹோட்டல் அருகே இறக்கி விட்டுவிட்டு தப்பியுள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் அந்த வாலிபர் புகார் அளிக்கவே விரைந்து வந்த சென்று அந்த நால்வரையும் போலீஸார் பிடித்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதில் ஒருவர் 18 வயது நிரம்பாதவர் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் ஒருவரை சக இளைஞர்கள் கடத்தி சென்று பாலியல்ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :