வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bharathi
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (14:29 IST)

பச்சிளங் குழந்தையின் மூக்கை கடித்த எலி: செவிலியர் பணியிடை நீக்கம்

மத்திய பிரதேசத்தில்  செவிலியர்களின் கவனக்குறைவால் பச்சிளங் குழந்தையின் மூக்கை எலி கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளங் குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை பிரிவில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்த குழந்தையின் மூக்கை எலி கடித்துக் குதறியது.

இந்தச் சம்பவம் வெளியே கசிந்ததும்  சோனாலி என்ற  செவிலியரை மருத்துவமனை நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்தது. குழந்தை கண்காணிப்பாளர் ஒருவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் அரசு பொதுமருத்துவமனையில் எலி கடித்ததால் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்து குறிப்பிடத்தக்கது.