வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 16 ஜூன் 2016 (04:47 IST)

கருப்புப் பணத்தை மீட்க ஸ்விட்சர்லாந்த் செல்லும் இந்திய அதிகாரிகள் குழு

ஸ்விட்சர்லாந்தில் நாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை பெற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக இந்திய அதிகாரிகள் குழு விரைவில் அந்நாட்டுக்குச் செல்லவுள்ளது.


 


 
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஜெனீவா சென்றிருந்தபோது, ஸ்விட்சர்லாந்து அதிபர் ஜோஹன் ஷ்னைடர் அம்மானைச் சந்தித்து, கருப்புப் பண விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
இதைத்தொடர்ந்து, அந்நாட்டு உயர் அதிகாரிகள் புதன்கிழமை டெல்லி வந்து மத்திய நிதியமைச்சக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பிலான வரி மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
 
கருப்புப் பணம் குறித்து தகவல்களைத் தாமாகவே பகிர்ந்து கொள்ள ஏதுவான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான சட்டப்பூர்வ சாத்தியக்கூறுகள் தற்போது எங்களிடம் உள்ளன.
 
இதன் ஒரு பகுதியாக இரு நாட்டு நிபுணர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாத மத்தியில் சந்தித்து ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, இந்திய அதிகாரிகள் குழு ஸ்விட்சர்லாந்து செல்லும் எனத் தெரிகிறது.