Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெயரை காரணம் காட்டி வேலை மறுக்கப்படும் இந்தியர்: அப்படி என்ன பெயர் தெரியுமா??


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 21 மார்ச் 2017 (15:57 IST)
தன்னுடைய பெயரை காரணம் காட்டி தனக்கு வேலை தர மறுக்கப்படுவதாக பட்டாதாரி இளைஞர் ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 
 
ஜாம்ஷெட்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னை நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மரைன் இன்ஜினியரிங் படித்து முடித்தார். படிப்பு முடிந்து 2 ஆண்டுகளாகியும் வேலை கிடைக்கவில்லை.
 
இதுவரை கிட்டதட்ட 40 நேர்காணல்களில் பங்குபெற்று நிராகரிக்கப்பட்டு உள்ளார். இத்தனை வேலை நிராகரிப்புக்கும் காரணம் அவரது பெயர்.
 
அவரின் இந்த பெயரால் வெளிநாடு செல்லும் போது பிரச்னை ஏற்படும் என்பதால் இவருக்கு வேலை மறுக்கப்படுகிறது. பாஸ்போர்ட், ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் என்று அனைத்திலும் தன் பெயரை மாற்றினாலும், கல்விச் சான்றிதழ்களில் உண்மையான பெயரே உள்ளது. 
 
அப்படி என்ன பெயரது என்று தெரியனுமா? ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் என்பது தான் அந்த இளைஞரின் பெயர்.


இதில் மேலும் படிக்கவும் :