1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Modified: புதன், 9 ஜூலை 2014 (12:33 IST)

கடத்தப்பட்ட இந்திய நர்சுகளுக்கு வேலை அளிக்கும் தொழிலதிபர்

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளால் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ள நர்சுகளுக்கு ஐக்கிய அரபுக் குடியரசில் வேலை அளிக்க தயாராக உள்ளதாக இந்திய தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய அரபுக் குடியரசு, இந்தியா, எகிப்து போன்ற நாடுகளில் மருத்துவமனைகளை நடத்திவரும் பி.ஆர். ஷெட்டி என்னும் இந்திய தொழிலதிபர், கடும் பதற்றம் நிலவி வரும் ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளால் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ள நர்சுகளுக்கு ஐக்கிய அரபுக் குடியரசில் வேலை அளிக்க தயாராக உள்ளதாகவும், தன்னுடைய மருத்துவமனைகளில் தற்போது பணியிடங்கள் இல்லாவிட்டாலும், இந்த நர்சுகளை ஐக்கிய அரபுக் குடியரசில் பாதுகாப்பான இடங்களில் வேலைக்கு சேர்க்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக பேசிய ஷெட்டி, ஈராக்கில் இந்திய நர்சுகள் கடத்தப்பட்ட சம்பவம் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தற்போது அவர்கள் பத்திரமாக திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அவர்கள் வேலையை விட்டு, வருவாய் பெற முடியாத சூழலில் உள்ளனர். அதனால் அவர்களுக்கு வேலை அளிக்க முடிவு செய்தேன்.
 
இது தொடர்பாக நான் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியிடம்   பேசியபோது, அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் எனக் கூறிய அவர், கடத்தப்பட்ட நசுகளை பத்திரமாக மீட்க இந்திய வெளியுறவு துறை, மாநில அரசுகள் கடினமாக உழைதுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.