1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 22 அக்டோபர் 2014 (18:38 IST)

இந்திய குத்துச் சண்டை வீராங்கனைக்கு தடை

இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த 2014 ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் சரிதா தேவி சிறப்பாக விளையாடியபோதும் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இதனால் சரிதா தேவி கடும் அதிருப்தி அடைந்தார். மேலும் தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தையும் பெற மறுத்தார்.

மேலும் தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை தன்னை வென்ற தென் கொரியா வீராங்கனைக்கு அணிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், வெண்கலப்பதக்கம் சரிதா தேவியிடமே ஒப்படைக்கப்பட்டது.

சர்வதேச குத்துச்சண்டை சங்கம் இந்த சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்தியது. இந்நிலையில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி மற்றும் 3 பயிற்சியாளர்களை இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.