வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 11 ஜூன் 2015 (13:11 IST)

பாகிஸ்தான் பயந்துவிட்டது: மனோகர் பாரிக்கர் கருத்து

மியான்மரில் இந்திய ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் அரசு பயந்துவிட்டதாக மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் கருத்து தெரிவித்தார்.
 

 
கடந்த ஜூன் 4ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தின் சான்டெல் நகர் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பயங்கர தாக்குதல் நடத்தி 20 ராணுவ வீரர்களை சுட்டுப் படுகொலை செய்தனர்.  
 
பின்பு, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், தங்களை காப்பாற்றிக் கொள்ள, அருகில் உள்ள மியான்மர் காட்டுப் பகுதிக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டனர்.
 
இதை அறிந்த, இந்திய இந்திய ராணுவம், மியான்மர் நாட்டு எல்லைக்குள் சென்று, தீவிரவாதிகள் பதுங்கியிருந்த 2 இடங்களில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் நிலைகுழைந்து போனார்கள். மேலும், 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
 
இந்த தாக்குதல் குறித்து, மத்திய பாதுகாப்புத்துறைத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கருத்து தெரிவிக்கையில், இந்தியா மீது தீவிரவாதிகள் மறைந்து இருந்து தாக்கல் நடத்திவிட்டு தப்பிவிட்டனர். ஆனால், இந்தியா அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இந்த அதிரடி தாக்குதலில் பயம் கொண்டு சிலர் பயந்து பேசிவருவது தெளிவாக தெரிகிறது. இந்தியாவின் பாதுகாப்பில் எப்போதும் சமரசம் என்பதே கிடையாது என அழுத்தமாக கூறினார்.