வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (13:41 IST)

காலக் கொடுமை: ஊழல், லஞ்சம் வாங்குவதிலும் கொடுப்பதிலும் இந்தியா முதலிடம்!!

ஆசிய பசுபிக் மண்டலத்தில் 69 சதவீத இந்தியர்கள் பொது சேவைகளுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
 
ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளின் ஊழல், லஞ்சம் அளவினை சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு ஆய்வு செய்தது. 
 
சுமார் 16 நாடுகளில் 20 ஆயிரம் பேரிடம் நடத்திய அந்த ஆய்வின் முடிவில் லஞ்சம் வாங்குவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
 
இந்தியாவைத் தொடர்ந்து வியட்நாம் நாட்டினர் 65 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர். பாகிஸ்தானில் 40 சதவீதம் பேரும், சீனாவில் 26 சதவீதம் பேரும், தென்கொரியாவில் 3 சதவீதம் பேரும் லஞ்சம் வழங்கியிருப்பதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
ஜப்பானில் 0.2% பேர் மட்டுமே லஞ்சம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.