Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கண்காணிப்பை தீவிர படுத்த அமெரிக்காவின் உதவியை நாடும் இந்தியா!!


Sugapriya Prakash| Last Modified சனி, 20 மே 2017 (11:46 IST)
எல்லையில் தொடர்ந்து அச்சுறுத்தும் சீனா, பாகிஸ்தான் நாடுகளை கண்டிக்கும் நோக்கத்தில் இந்தியா அமெரிக்காவின் உதவியை நாடி உள்ளது.

 
 
அதாவது, சீனா, பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை தீவிரப் படுத்துவதற்காக அமெரிக்காவிடமிருந்து இந்தியா ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளது.
 
அதிநவீன 64டி அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்காக 39 ஹெலிகாப்டர்களை ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் இந்தியா வாங்கவுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :