வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 26 செப்டம்பர் 2014 (10:20 IST)

எபோலா நிவாரணம்: 12 மில்லியன் டாலர் வழங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல்

எபோலா வைரஸ் நோய் நிவாரணத்திற்காக, 12 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐ.நா சபைக்கு வழங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
 
உயிர் கொல்லி நோய்களில் ஒன்றான எபோலா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்நோய் தாக்குதலால் இதுவரை 2200 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எபோலா நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க ஐ.நா. சபை பல உதவிகளை மேற்கொண்டு வருகிறது. 
 
இந்நிலையில் இதில் இந்தியாவின் பங்களிப்பாக 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க, பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், இந்த அறிவிப்பை நீயூயார்க்கில் நடைபெறும் 69 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டத்தில் பங்கேற்கும் நரேந்திர மோடி, அறிவிப்பார் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதில் ஐ.நா. தலைமை செயலக நிதியத்திற்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களும், எபோலாவிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் கருவிகளுக்காக 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் தொகையையும் இந்தியா வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.