வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 25 மே 2015 (18:45 IST)

2025இல் இந்தியாவில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் - ஆய்வுகள் முடிவு

இந்தியாவில் தண்ணீர்த் தேவையை தண்ணீர் ஆதாரங்கள் வருங்காலத்தில் நிறைவு செய்ய முடியாமல் போகும் என்று அண்மை ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.
 
ஈ.ஏ வாட்டர் (EA Water) என்ற நிறுவனம் வெளியிட்ட ஆய்வில், ”2025க்குள் இந்தியாவில் ​​பெரும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும். இந்தியக் குடும்பங்களின் சராசரி வருவாய் உயர்ந்திருக்கிறது. உற்பத்தித்துறை கண்டுவரும் வளர்ச்சியும் தண்ணீர்த் தேவையை அதிகரிக்கும்.
 

 
நிலத்தடியில் கி​டைக்கின்ற தண்ணீரில், இந்தியாவில் 80 விழுக்காடு வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. 70 விழுக்காடு விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நிலத்தடியில் உள்ள தண்ணீரின் இருப்பு ​வேகமாகக் குறைந்துகொண்டு வருகிறது.
 
இதுபோல கனடா, இஸ்ரேல், ஜெர்மனி, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா, சீனா மற்றும் பெல்ஜியம் ஆகிய வெளிநாட்டினர்கள் உள்நாட்டு நீர் துறையில் 13 பில்லியன் டொலர் மதிப்புள்ள பெரிய முதலீடுகளை செய்ய வாய்ப்புள்ளது.
 
மகாராஷ்டிரா நீர் சார்ந்த துறைக்கு ஒரு முக்கிய இடமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே 12க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் மும்பை மற்றும் புனேயில் வடிவமைப்பு மற்றும் பொறியியல் மையங்கள் அமைக்கவுள்ளது.
 
தற்போது, அந்த மாநிலத்தில் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தரத் துறையினரின் தேவையை பூர்த்தி செய்ய 1,200 க்கும் மேலான நிறுவனங்கள் நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பை கையாண்டு வருகின்றன.
 
இதனால் தண்ணீர் சுத்திகரிப்பு, தண்ணீர் மறுபயனீடு ஆகிய நடவடிக்கைகளுக்கான தேவை அதிகரிக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், மோடி அரசு கொண்டு வந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம், ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கும் திட்டத்தின் மூலம் 1 மில்லியன் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.