வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 21 செப்டம்பர் 2014 (13:05 IST)

செவ்வாய் கிரக நீள்வட்டப் பாதையை நெருங்கியது மங்கள்யான் : என்ஜினை இயக்கும் பணி தீவிரம்

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நீள்வட்டப் பாதையை நெருங்கி வருவதால், அதன் என்ஜினை இயக்குவதற்கான ஆயத்த பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் தனது பயண தூரத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது. மங்கள்யான் விண்கலம் நாளை செவ்வாய் கிரகத்தின் நீள்வட்டப் பாதையை அடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
 
இதனால் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்துவதற்காக,  விண்கலத்தின் என்ஜினை இயக்குவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திட்டமிட்டப்படி வரும் 24 ஆம் தேதி மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதன் பிறகு மங்கல்யான் தனது ஆராய்ச்சி பணியை துவங்கும் என்று தெரிகிறது.