வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 20 செப்டம்பர் 2014 (19:32 IST)

காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை

காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் முல்தான் நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சி விரைவில் ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அப்பொழுது காஷ்மீர் முழுவதையும் முழு கட்டுபாட்டில் கொண்டு வர உள்ளதாகவும் அவர் கூறினார். காஷ்மீர் பாகிஸ்தானின் அங்கம் என்று தெரிவித்த அவர் காஷ்மீரின் ஓரு அங்குல நிலத்தை கூட இந்தியாவிற்கு விட்டுத்தர முடியாது என்றும் கூறினார்.
 
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதின் காஷ்மீர் இந்தியாவின் அங்கம் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என்று தெரிவித்ததார். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகிய விஷயத்தில் சமரசத்திற்கு இடம் கிடையாது என்று அவர் தெரிவித்தார்.
 
பல்வேறு அரசியல் கட்சிகளும் பிலாவல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் ஆதாயத்திற்காக காஷ்மீர் பிரச்சனையை அவ்வப்போது பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் எழுப்புவதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சந்திப் தீட்சித் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறியுள்ளார்.