வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 5 மார்ச் 2017 (20:48 IST)

வதந்தி வெளியிடுவதில் இந்திய ஊடகம் 2வது இடம்

பொய்யான செய்திகளை வழங்குவதில் இந்திய ஊடகம் உலக அளவில் இரண்டாவது பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
எடல்மன் டிரஸ்ட் என்ற நிறுவனம் அண்மையில் உலக அளவில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியது. உலக பொருளாதார மன்றத்தின் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பெரும்பாலான இந்திய ஊடகங்கள் நம்பகத்தன்மை அற்ற செய்திகளை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாகவே இந்திய ஊடகங்கள் வதந்திகளைச் செய்திகளாக வெளியிடுவது தெரியவந்துள்ளது. உலக அளவில் நம்பகத்தன்மையற்ற ஊடக நிறுவனங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. 3வது இடத்தில் அயர்லாந்து இடம்பெற்றுள்ளது. டி.ஆர்.பி ரேட்டிங்காக வெளியிடப்படும் செய்திகளை தாங்கள் நம்புவதில்லை என பெரும்பாலான மக்கள் கூறுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.