1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 15 பிப்ரவரி 2017 (10:08 IST)

104 செயற்கைக்கோள்: உலக சாதனை படைத்த இந்தியா!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி.எஸ்.எல்.வி. மற்றும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது.


 
 
இந்நிலையில் தொடர்ந்து பூமியில் நடக்கும் மாற்றங்களை கண்காணிப்பதற்காக 714 கிலோ எடை கொண்ட இந்தியாவின் கார்டோசாட் 2 செயற்கைக்கோளை பிஎஸ்.எல்.வி- சி 37 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
 
இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 505 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.
 
இந்த கார்டோசாட் 2 செயற்கைக்கோளுடன் அமெரிக்கா, இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாண்ட் மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த 101 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும், ஐ.என்.எஸ் 1ஏ, ஐ.என்.எஸ் 1பி என 2 நானோ செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டது.
 
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது பி.எஸ்.எல்.வி சி37 என்ற ராக்கெட்டின் மூலம் இந்த 104 செயற்கைக்கோள் அனுப்பி புதிய உலக சாதனை படைத்துள்ளது.