வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (19:18 IST)

எங்கள் சட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியாது! – அமெரிக்காவுக்கு இந்தியா பதில்

இந்திய குடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு பதிலளித்துள்ளது இந்தியா.

இந்தியாவிற்குள் வாழ்ந்து வரும் இந்தியர் அல்லாத மற்ற நாட்டினருக்கு குடியுரிமை வழங்கும் புதிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இஸ்லாம் தவிர மற்ற மதத்தினரை மட்டும் இணைத்திருந்தது பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் ”இந்திய குடியுரிமை சட்டம் முற்றிலும் தவறானதாக உள்ளது. மதத்தை பொருட்படுத்தாமல் அனைவரும் சமம் என்னும் இந்திய அரசியலமைப்புக்கு முற்றிலும் மாறனதொரு புதிய சட்ட திருத்தத்தை இந்தியா செய்து வருகிறது” என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சகம் ”குடியுரிமை சட்டம் இந்தியாவை விட்டு யாரையும் வெளியே அனுப்பாது. குடியுரிமை சட்டம் மற்ற நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கக் கூடியது. இதை மதரீதியான சிந்தனை என குறை சொல்லக்கூடாது.

அமெரிக்க ஆணையம் எங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது புதிதான ஒன்று அல்ல, இந்த சட்டம் குறித்த தெளிவான சிந்தனை இல்லாமல் பேசுவது வேதனையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.