வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2017 (08:07 IST)

பணத்திற்காக கடத்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரியின் மகன் படுகொலை

பெங்களூரில் 19 வயது இளைஞர் ஒருவர் தனது நண்பர் ஒருவரின் கும்பலால் பணத்திற்காக கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின் மகன் சரத்குமார் புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அதை அவர் தனது நண்பர்களிடம் காட்டிவிட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவரது பெற்றோருக்கு வீடியோ மெசேஜ் ஒன்று வந்தது
 
அதில் தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருப்பதாகவும், ரூ.50 லட்சம் கொடுத்தால் மட்டுமே தன்னை விடுவிப்பதாக கூறுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார் இந்த கடத்தலில் சரத்குமாரின் நண்பர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவருடைய கும்பல்தான் கடத்தியதாகவும் கண்டுபிடித்தனர்.
 
தங்களை போலீஸ் நெருங்கியதை கண்டுபிடித்த அந்த கடத்தல் கும்பல் சரத்குமார் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. ஆனால் ஒருசில மணி நேரத்தில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.