புதுச்சேரியில் திமுக கூட்டணிக்கு 17 இடங்கள்

புதுச்சேரியில் திமுக கூட்டணிக்கு 17 இடங்கள்

K.N.Vadivel| Last Modified வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (22:43 IST)
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 17 இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு 17 இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து தமிழகம் மற்றும் புதுவையில்
கருத்துகணிப்பு நடத்தியது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும், அதிமுக ஒரு தொகுதிகளிலும், காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகம் போல, புதுச்சேரியிலும் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது எனவும் டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :