வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வியாழன், 20 நவம்பர் 2014 (19:16 IST)

சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது

சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.
 
ரஜினிகாந்துக்கு இந்தி நடிகர் அமிதாப் விருதை வழங்கினார். அவருக்கு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரஜினிகாந்துக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். இந்த விருதை பெற்றதில் தாம் பெருமைப்படுவதாக சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.
 
படத்தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர் மற்றும் ரசிகர்களுக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன் என்று தெரிவித்தார். இந்த விருதை தமக்கு அளிக்கப்பட்ட கவுரம் என்று கருதுவதாக ரஜினிகாந்த் பேசினார்.