1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2016 (15:48 IST)

மனைவி தேனிலவில் ஒத்துழைக்காவிட்டால் விவாகரத்து பெறலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

தேனிலவில் ஒத்துழைக்காத மனைவியிடம் இருந்து கணவன் விவகரத்து பெறலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.


 

 
டெல்லியை சேர்ந்த தம்பதியினருக்கு 2004ஆம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. திருமணம் ஆன மறுநாளே தேனிலவுக்கு சிம்லா சென்றுள்ளனர். தேனிலவில் மனைவி ஒத்துழைக்காததால் கணவர் திருப்தி அடையவில்லை. அதோடு மனைவி அவர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
 
திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த நிலையில் மனைவி கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றார். மனைவி தாய் வீட்டிலிருந்து கணவன் மற்றும் அவரது குடும்பம் மீது காவல்துறையினரிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார்.
 
இதானல் கணவன் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அதில் அவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. ஆனால் அவரது மனைவி அதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த மேல்முறையீட்டு வழக்கில் கணவர் விவகாரத்து பெறலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதோடு இது ஒரு விதிவிலக்கான வழக்கு என்றும் தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
 
பெற்றோர்களால் நிச்சயித்து நடைப்பெறுகிற திருமணங்களில், மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள ஏற்ற காலம் தேனிலவு தான். ஆனால் இந்த வழக்கு அதில் விதிவிலக்காக அமைந்துள்ளது. 
 
எனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கணவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.