Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிச்சை எடுப்பதும் ஒரு வேலைவாய்ப்புதானா? மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

Last Modified திங்கள், 29 ஜனவரி 2018 (01:33 IST)
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, '“ பக்கோடா விற்பனை செய்யும் ஒரு நபர் வீட்டிற்கு ரூ.200 கொண்டு சென்றால் அதனை வேலைவாய்ப்பாக கருத வேண்டுமா, இல்லையா?, என்று கூறியிருந்தார்.

இதற்கு தனது டுவிட்டரில் பதில் கூறிய ப.சிதம்பரம், 'பக்கோடா விற்பனை செய்வதை பிரதமர் வேலைவாய்ப்பு என்று கூறினால், பிச்சையெடுப்பது கூட வேலைதான். ஏழ்மை அல்லது முடியாமை காரணமாக வாழ்க்கைக்காக பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களையும் ‘வேலை வழங்கப்பட்டவர்களாக’ என எண்ணிக்கையை தொடங்குங்கள்,” என்று கூறியுள்ளார்.

அரசு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு, சுயவேலை வாய்ப்பினை இளைஞர்கள் தேடி கொள்வதற்கும் வித்தியாசம் இருப்பதாக கூறிப ப.சிதம்பரம், 'வேலைவாய்ப்பு' மற்றும் 'சுய வேலைவாய்ப்புக்கு' இடையே இடைவேளியை கொண்டிருக்க வேண்டியது முக்கியமானது என்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது வழக்கமானது மற்றும் நியாயமான பாதுகாப்பானது என்றும் கூறினார்.
இதுபோன்று எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

பிரதமரின் இந்த கருத்து குறித்து குஜராத்தின் ஹர்திக் பட்டேல் கூறுகையில் “டீக்கடைக்காரர் இப்படிதான் பேசுவார், பக்கோடா கடை வைப்பதையும் அவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கிவிட்டதாக கருதுவார்கள். நிச்சயமாக பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாமலே இருக்கிறார்,” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :