1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (14:48 IST)

ஐபிஎம் ஊழியரை குத்திக் கொலை செய்த கும்பல்: பெங்களூருவில் சோகம்

பெங்களூரு ஐபிஎம் கால் சென்டரில் மேலாளரை 4 பேர் கொண்ட கும்பல், அவரது வீட்டு வாசலில் வைத்து குத்திக் கொலை செய்தது.


 

 
பெங்களூரு ஐபிஎம் கால் சென்டரில் மேலாளராக இருந்தவர் அபிஷேக் திம்மராயப்பா. இவர் மைசூர் ரோடு அருகே உள்ள பந்தரபாளையாவில் வசித்து வந்தவர்.
 
இந்நிலையில், அவர் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டு வாசலில் நின்றிருந்த 4 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை கத்தியால் சரமாரியாகக் குத்தினர்.
 
பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த எதிர்பாராத தாக்குதலால், படுகாயம் அடைந்த அபிஷேக் வலியால் துடித்துக் கொட்டிருந்தார்.
 
அப்போது, இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்களும், குடும்பத்தினரும் அவரை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றனர்.
 
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அபிஷேக் நயந்தனஹள்ளி அருகே உள்ள நியூ நேஷனல் பள்ளியின் உரிமையாளர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரது தந்தை மரணம் அடைந்தார்.
 
இவர், அபிஷேக் ரஷ்மி என்ற பெண்ணை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் செய்து கொண்டார்.
 
இந்நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.