1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (13:58 IST)

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்: சுப்பிரமணியசாமி

செயற்கைக் கோள்களை ஏவுவதற்காக உலகிலேயே மிக குறைந்த செலவில் ராக்கெட்டுகளை அறிமுகம் செய்ததால்தான் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது

இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்தவர் நம்பி நாராயணன்.ராக்கெட் தொடர்பான விஞ்ஞான ரகசியத்தை நம் அண்டை நாடான, தீவிரவாதம் அச்சுருத்தல் உள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு விற்பனை செய்தததாக 1994 ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்று கூறி அதனால் பாதிக்கப்பட்ட அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சுப்பிரமணியசாமி தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

உலக நாடுகளின் பொறாமையினால் நம்பி நாராயணன் பழி வாங்கப்படார்.செயற்கைக் கோள்களை ஏவுவதற்காக உலகிலேயே மிக குறைந்த செலவில் ராக்கெட்டுகளை அறிமுகம் செய்ததால்தான் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது. இதற்காக ஐக்கிய முற்போக்கு அரசு வெட்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.