செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : புதன், 23 ஏப்ரல் 2014 (15:12 IST)

என்னிடம் 500 ரூபாயும், ஒரு பழைய ஜீப்பும் உள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்

நாடுமுழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், வாரணாசி தொகுதியில் பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக களமிறங்கியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவரது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.   
வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது , 'தன்னிடம் 500 ரூபாய் மட்டும் இருப்பதாகவும், ஒரு பழைய ஜீப்பில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். 
 
இந்த தொகுதியில், நரேந்திர மோடி அவரது  வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்கிறார். அவர் நாளை ஹெலிகாப்டர் மூலம் வந்து அதிலேயே பயணம் செய்வார். அவரை அதற்கு பின்னரும் ஹெலிகாப்டரில் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டும் என்றும்,  நாடாளுமன்ற தேர்தலுக்காக தன்னை எதிர்த்து போட்டியிடும் அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கில் செலவிடுகிறார்கள் என்பதையும்  கெஜ்ரிவால் சுட்டிக்காட்டினார். 
 
மே 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் வாரணாசி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் என்னும் வழக்கறிஞர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.