வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (13:44 IST)

எனது குற்றச்சாற்றுக்கு பதிலளிக்க சோனியா புத்தகம் எழுதினால் மகிழ்ச்சி - நட்வர்சிங்

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான நட்வர்சிங் ‘‘ஒன் லைப் இஸ் நாட் எனப்’’ என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் உள்ள தகவல்களை ஒவ்வொரு பகுதியாக வெளியிட்டு வருகிறார். முதல் நாள் வெளியிட்ட தகவலில் சோனியாவை பிரதமராக விடாமல் ராகுல் தான் தடுத்தார் என்று கூறியிருந்தார்.
 
நேற்று ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பும் முடிவை அமைச்சரவை ஒப்புதல் பெறாமலேயே எடுத்தார் என்றும் இலங்கை தமிழர் பிரச்சனையை தவறாக கையாண்டதால் கொலை செய்யப்பட்டார் என்றும் கூறிய தகவல் வெளியிடப்பட்டது. அத்துடன் சோனியா தன்னை இழிவாக நடத்தினார். இது எந்த இந்தியனுக்கும் ஏற்படாத ஒன்று என்றும் நட்வர்சிங் குற்றம்சாற்றினார்.
 
இதுபற்றி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘நான் என் சுயசரிதையை புத்தமாக எழுதுவேன். அதில் உங்கள் கேள்விகளுக்கு பதில் இருக்கும். நான் உண்மைகளை மட்டுமே எழுதுவேன்’’ என்றார்.
 
இதற்கு நட்வர்சிங் பதிலளிக்கும் விதமாகக் கூறியதாவது:–
 
எனது புத்தகம் சோனியாவை மையப்படுத்தி எழுதப்பட்டது அல்ல. சோனியா மற்றும் ராகுல் காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து என்னால் எழுத முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை.
 
எனது குற்றச்சாற்றுக்கு பதிலளிக்கும் விதமாக சோனியாவும் புத்தகம் எழுதினால் அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
 
இவ்வாறு நட்வர்சிங் கூறினார்.