Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேறு பெண்ணுடன் உல்லாசம் ; சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்த மனைவி


Murugan| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (15:51 IST)
தன்னுடைய கணவர் வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை ரகசிய கேமரா வைத்து கண்டுபிடித்த மனைவியை, அவரின் கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது.

 

 
கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரையொட்டியுள்ள மலவகொப்பா எனும் கிராமத்தில் வசிப்பவர் ஹாலேஷ்நாயக். இவர் ஒரு விவசாயி. இவரின் மனைவி ஷோபாபாய். ஹாலேஷ் தினமும் குடித்து விட்டு வந்த மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், ஹலேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கலாம் என ஷோபா சந்தேகப்பட்டார்.
 
அதைக் கண்டுபிடிக்க, கணவருக்கு தெரியாமல் சிசிடிவி கேமாராவை வீட்டில் பொருத்தி விட்டு, ஷோபா விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டார். அப்போது ஹாலேஷ் ஒரு பெண்ணை அழைத்து வந்து, வீட்டில் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததன் மூலம் ஷோபா இதை தெரிந்து கொண்டார். எனவே இது தொடர்பாக அவர் கணவனிடம் சண்டை போட்டுள்ளார். இந்த பிரச்சனை கிராம பஞ்சாயத்துக்கு போனது. 


 

 
ஆனால், தான் அப்படி எதுவும் செய்யவில்லை என ஹாலேஷ் மறுத்துள்ளார். எனவே, ஷோபா சிசிடிவி கேமராவில் உள்ள பதிவை அவர்களுக்கு போட்டுக் காட்டியுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் பெரியவர்கள் ஹாலேஷை கண்டித்துள்ளனர். 
 
வீட்டில் கேமரா வைத்து தன்னை கண்டுபிடித்ததோடு, அதை ஊர் மக்களுக்கு முன் காட்டி, தன்னை அசிங்கப்படுத்திய ஷோபா மீது ஹாலேஷ் கோபமாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் ஷோபாவிடம் தகராறு செய்த அவர்,  அரிவாளால் ஷோபாவின் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் பலமாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
 
இது தொடர்பாக ஷோபா அந்த பகுதி போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஹாலேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :