1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (05:06 IST)

முதல்வரின் வாட்ச் வெறும் 70 லட்ச ரூபாய் தான்

முதல்வரின் வாட்ச் வெறும் 70 லட்ச ரூபாய் தான்

க‌ர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தனது கையில் அணிந்துள்ள வாட்ச்-ன் மதிப்பு வெறும் 70 லட்ச ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.
 

 
இது குறித்து, முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவருமான குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்னாள் அமைச்சர் அதகூரு ஹூச்சேகவுடா விஸ்வநாத் உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
முதல்வர் சித்தராமையா கடந்த வாரம் வந்து அவரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரது மிகவும் விலை உயர்ந்த ஹுப்லோட் வாட்ச் கட்டியிருந்தார்.
 
நான் விசாரித்த வரையில் இந்த வாட்ச்-ன் மதிப்பு, ரூ. 68 லட்சத்து 56 ஆயிரம் ஆகும். மேலும், சுங்க வரியுடன் சேர்த்து 70 லட்சம் ரூபாய் ஆகும். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.