1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 1 நவம்பர் 2016 (15:53 IST)

8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? - முழு தகவல்

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள மத்தியச் சிறையிலிருந்து தப்பியோடியதாக கூறப்படும்,‘சிமி’ அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 8 பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 

 
சிறையிலிருந்து தப்பிய சில மணிநேரத்திலேயே அவர்கள் 8 பேரையும், போபாலின் புறநகர் பகுதியிலுள்ள மல்லிகேடா பகுதியில் சுற்றிவளைத்து போலீசார் சுட்டு வீழ்த்தியதாக மாநில உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் கூறியுள்ளார்.
 
என்கவுண்ட்டருக்கு முன்னதாக, சரணடையுமாறு பயங்கரவாதிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், போலீஸ் முற்றுகை வளையத்தை மீறி, அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதால், என்கவுண்ட்டர் நடத்தப்பட்டதாகவும் மாநில காவல் துறைத் தலைவர் யோகேஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
 
‘சிமி’ இயக்கம்:
 
’சிமி’ எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு, 2001ஆம் ஆண்டு அப்போதைய மத்திய பாஜக அரசால் தடை செய்யப்பட்டது. இதனையடுத்து ‘சிமி’ இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு நாடெங்கும் உள்ள பல்வேறு மத்திய சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டனர்.
 
அவர்களில் அம்ஜத், ஜாகீர் உசேன் சாதிக், முகம்மது சாலிக், முஜிப் ஷேக், மெகபூத் குட்டு, முகம் மது காலித் அகமது, அகில் மற்றும் மஜீத் ஆகியோர் ரயில் குண்டுவெடிப்பு, வங்கிக் கொள்ளை ஆகிய வழக்குகளை கைது செய்யப்பட்டு உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட போபால் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
காவலர் கொலை:
 
இந்நிலையில், இந்த 8 பயங்கரவாதிகளும் திங்கட்கிழமை அதிகாலை 2 மணிக்கு போபால் சிறையில் இருந்து தப்பிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டபோது, காவல் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ராம்சங்கர் அவர்களை, சாப்பிடப் பயன்படுத்தும் அலுமினியத் தட்டை வளைத்து கத்திபோல பயன்படுத்தி, அவரைக் கழுத்தை அறுத்துக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
 
தப்பியோட்டம்:
 
பின்னர், சிறையில் போர்த்திக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த போர்வையைக் கயிறுபோல பயன்படுத்தி, சிறைச்சாலையின் சுவர் மீது ஏறி தப்பியுள்ளனர் என்றும், சுமார் 3 மணி நேரம் கழித்தே, இவர்கள் தப்பிய விஷயம் போபால் மத்திய சிறைச்சாலை உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
எல்லைகளுக்கு ‘சீல்’:
 
அதைத்தொடர்ந்து, 8 பயங்கரவாதிகளும் போபால் மாவட்டத்தை விட்டு தப்பிவிடக்கூடாது என் பதற்காக அம்மாவட்ட எல்லைகள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன. பயங்கரவாதிகளைப் பிடிக்க உதவும்படி பொதுமக்களுக்கு மத்தியப் பிரதேச அரசு வேண்டுகோள் விடுத்தது. தப்பிய பயங்கரவாதிகள் பற்றி தக வல் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு தரப்படும் என்றும் மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்தது.


 
சுற்றி வளைப்பு:
 
இந்நிலையில் 8 பயங்கரவாதிகளும் போபால் புறநகர் பகுதியான இன்த்கெடி எனும் கிராமத்தில் ஒரு இடத்தில் பதுங்கி இருக்கும் தகவல் காலை 11 மணிக்கு காவல்துறைக்கு தெரிய வந்ததாகவும், உடனடியாக அந்த இடத்தை சுற்றிவளைத்த மத்தியப்பிரதேச மாநில போலீசார், பயங்கரவாத தடுப்புப் படையினருடன் இணைந்து, பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
 
8 பயங்கரவாதிகளும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதுடன், தப்பியோட முயன்றதால் வேறு வழியின்றி அவர்களைச் சுட்டுக் கொல்ல நேரிட்டதாக தெரிவித்துள்ள போலீசார், பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட இடத்திலிருந்து நிறைய ஆயுதங்கள், வெடிபொருட்களை கைப்பற்றி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
 
என்ஐஏ விசாரணை:
 
போபால் சிறையில், பயங்கரவாதிகள் 8 பேரும் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்தாற்போல் தப்பித்ததும், அதேபோல ஒரேநேரத்தில் 8 பேருமே சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
முந்தைய சம்பவம்:
 
இதேபோன்று சிமி பயங்கர வாதிகள் தப்பிய சம்பவம், இதற்கு முன்பு கடந்த 2001-ஆம் ஆண்டும் மத்தியப் பிரதேசத்தில் நடந்தது. அப்போது, 6 ‘சிமி’ இயக்கத்தினர் உட்பட 10 சிறைவாசிகள், சிறைக் கழிப்பறை சுவரை உடைத்து தப்பியோடினர். அவர்களில் 5 பேர் உடனடியாக பிடிபட்டனர். ஆனால்மற்றவர்களை பிடிக்க முடிய வில்லை. தப்பியோடியவர்கள் பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். அதில் 3 பேர் என்கவுண்ட் டரில் கொல்லப்பட்டனர், மீதமுள்ளவர்கள் கடந்த சில மாதங் களுக்கு முன்பு ஒடிசாவில் கைது செய்யப்பட்டனர்.
 
நீதி விசாரணை:
 
இந்நிலையில் ‘சிமி’ பயங்கரவாதிகள் சிறையில் இருந்துதப்பியது தொடர்பாக நீதி விசார ணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல் நாத் வலியுறுத்தியுள்ளார்.