வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 22 மே 2015 (16:26 IST)

”விலங்குகள் எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்?” - மத்திய அமைச்சருக்கு கட்ஜூ கண்டனம்

பசுமாடு எப்படி என்னுடைய தாயாக இருக்க முடியும் என்று மத்திய அமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மார்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
மாட்டு இறைச்சி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்ற மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவருமான மார்கண்டேய கட்ஜு, "நான் ஒரு இந்து. ஆனாலும், நான் மாடுக்கறி சாப்பிடுவேன். இனிமேலும் சாப்பிடுவேன். மாட்டுக்கறி சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது?.
 

 
உலகத்தில் 90% பேர் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்றனர். அவர்கள் எல்லோரும் பாவம் செய்தவர்களா? மாடு புனிதமானதாகவோ, நமது தாயகவோ இருக்க முடியும் என்பதை நான் மறுக்கிறேன். ஒரு விலங்கு எப்படி மனிதர்களுக்கு தாயாக இருக்க முடியும்?
 
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உட்பட, 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள்தான் " என்று கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.