பாலியல் தொழிலாளியிடம் மனதை பறிகொடுத்த இளைஞர்!

பாலியல் தொழிலாளியிடம் மனதை பறிகொடுத்த இளைஞர்!


Caston| Last Modified சனி, 8 ஜூலை 2017 (16:36 IST)
டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்ணை ஒரு இளைஞர் காதலித்து திருமணம் செய்ய உள்ளார். இதற்காக அந்த இளைஞன் தனது பெற்றோர்களின் சம்மதத்தையும் பெற்றுள்ளார்.

 
 
கடந்த 2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் தனது உடமைகள் அனைத்தையும் இழந்த 25 வயதான சுபி என்ற பெண் தனது ஏழ்மை காரணமாக பிழைப்புக்காக டெல்லி வந்தார். அவரிடம் இருந்த சிறிதளவு பணத்தையும் எடுத்துக்கொண்ட சிலர் அவரை பாலியல் தொழில் நடத்துபவர் ஒருவரிடம் விற்றுள்ளனர்.
 
டெல்லியில் ஜிபி ரோட்டில் உள்ள ஒரு பாலியல் தொழில் மையத்தில் அந்த பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அங்கு வாடிக்கையாளராக சென்ற சாகர் என்ற இளைஞருக்கு சுபி மீது காதல் வந்துள்ளது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.
 
தன்னுடைய குடும்பத்தில் தான் சுபியை காதலிப்பதை கூறி சம்மதம் வாங்கியுள்ளான் அந்த இளைஞன். ஆனால் அந்த பாலியல் தொழில் நடத்தும் நபர் சுபியை அனுப்ப மறுத்துவிட்டார். இதனால் அந்த இளைஞன் போலீசின் உதவியுடன் தனது காதலியை மீட்டு விரைவில் திருமணம் செய்ய உள்ளான்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :