வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 28 பிப்ரவரி 2015 (12:35 IST)

'2022க்குள் அனைவருக்கும் வீடு' - மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உறுதி

2022க்குள் அனைவருக்கு வீடு என்ற திட்டம் நிறைவேற்ற முயற்சி செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
 
2015-2016 ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது குறிப்பிட்டு பேசிய அருண் ஜேட்லி, ஏழ்மையை அகற்றுவதே அனைத்து திட்டங்களின் நோக்கம் என்றும், 2020க்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டம் நிறைவேற்ற முயற்சி செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.
 
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
 
6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
பணவீக்கம், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது.
 

 
அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.
 
பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்படும்.
 
நாட்டின் வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக உயரும்.
 
2022க்குள் அனைவருக்கு வீடு என்ற திட்டம் நிறைவேற்ற முயற்சி செய்யப்படும்.
 
கல்வித்தரம் உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
 
அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் என்பது அரசின் இலக்கு.
 
நாட்டில் 20 ஆயிரம் கிராமங்களுக்கு மின் வசதி.
 
பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
உலகின் 2வது மிகப்பெரிய பங்குச்சந்தையாக இந்தியா உள்ளது.
 
உலகில் மிக வேகமாக உயரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது.