வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 21 ஜனவரி 2015 (12:05 IST)

இந்து பெண்கள் 10 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் - சங்கராச்சாரியார் வாசுதேவானந்த்

அகமதாபாத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், இந்து பெண்கள் 10 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பத்ரிகாஷ் மடத்தின் சங்கராச்சாரியாரான வாசுதேவானந்த்  சரஸ்வதி கூறியுள்ளார்.
 
அகமதாபாத்தில் நடைபெற்ற மெகா மேளாவில் பத்ரிகா மடத்தின் சங்கராச்சாரியாரான வாசுதேவானந்த் சரஸ்வதி பேசினார்.
 
இது குறித்து வாசுதேவானந்த் சரஸ்வதி பேசியதாவது:-
 
இந்து மக்களின் ஒற்றுமையினால் மட்டுமே நரேந்திர மோடி பிரதமர் ஆகியுள்ளார். இந்து மக்கள் தங்களது பெரும்பான்மை பலத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஒவ்வொரு இந்து பெண்ணும்குறைந்தது 10 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் தங்களது இந்து மதமாகிய வேர்களுக்கு திரும்ப வேண்டும்.
 
மதமாற்றத்தை தடை செய்யக்கூடாது. ஏனெனில் இந்து மதத்திலிருந்துதான் கிருஸ்துவமும் இஸ்லாமியமும் மற்றும் சீக்கியமும் உருவானது. மதம் மாறியதற்காக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது''. இவ்வாறு வாசுதேவானந்த் கூறியுள்ளார்.
 
முன்னர் பாஜக எம்.பி சாக்ஷி மகாராஜ் இந்து பெண்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.