வாரிசு அரசியல் இந்தியாவில் வழக்கமாக உள்ளது; ராகுல் காந்தி


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (11:51 IST)
இந்தியாவில் பெரும்பான்மையாக வாரிசு அரசியல் உள்ளது என்றும் இதனால் என் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 

 
அமெரிக்காவில் பெர்க்லே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவில் உள்ள வாரிசு அரசியல் குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது:-
 
அனைத்து கட்சியிலும் வாரிசு அரசியல் பெரும் பிரச்சனையாக உள்ளது. அகிலேஷ் யாதவ், ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாரிசு அரசியல்வாதிகளாக உள்ளனர். நடிகர் அபிஷேக் கூட வாரிசு அடிப்படையில் வளர்ந்தவர்தான். இதனால் வாரிசு அரசியல் குறித்து என் மீது குற்றம் சுமத்த வேண்டாம்.
 
காஸ்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா வளர்ச்சிப் பெற்றது. ஆனால் ஆட்சியில் இந்தியாவில் ஜிஎஸ்டி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் மட்டுமே அதிகராம் குவிந்து கிடக்கிறது என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :