1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2015 (00:33 IST)

பாஜக எம்பி ஹேமமாலினி கார் மோதி 4 வயது குழந்தை பலி

பாஜக எம்பி ஹேமமாலினி சென்ற கார் மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானது. 
 

 
பிரபல நடிகையும், மதுரா தொகுதி பாஜக எம்பியுமான ஹேமமாலினி தனது தொகுதியான மதுராவில் இருந்து தனது பென்ஸ் காரில் ஜெய்ப்பூர் சென்றார். அப்போது, டவ்சா என்ற பகுதி அருகே கார் அதிவேகமாக சென்றது. அப்போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி, எதிரே வந்த கார் மீது மோதியது. 
 
இந்த விபத்தில் காரில் பெற்றோருடன் வந்த 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானது. பலத்த காயமடைந்த மற்றொரு குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த விபத்தில், நடிகை ஹேமமாலிக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவருக்கு, இடது கண் மற்றும் மூக்கு அருகே பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
இந்த தகவல் அறிந்த பாஜக மூத்த தலைவர்கள் ஹேமமாலினியை பார்த்து ஆறுதல் கூற மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.