Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹேமமாலினி தற்கொலை செய்துகொண்டாரா?: தினமும் சரக்கடிக்கிறார் என விமர்சனம்!

ஹேமமாலினி தற்கொலை செய்துகொண்டாரா?: தினமும் சரக்கடிக்கிறார் என விமர்சனம்!


Caston| Last Modified சனி, 15 ஏப்ரல் 2017 (13:03 IST)
நடிகையும் எம்பியுமான ஹேமமாலினி தினமும் சரக்கடிக்கிறார் என மகாராஷ்டிரா மாநில சுயேட்சை எம்எல்ஏ பச்சு காது கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
 
சுயேட்சை எம்எல்ஏ பச்சு காது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் விவசாயிகள் குடிப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள கூடியது என பேசினார். அப்படி பார்த்தால் நடிகை ஹேமமாலினி தினமும் மது அருந்துகிறார், அவர் என்ன தற்கொலையா செய்துகொண்டார்.
 
மேலும் பிள்ளைகளின் திருமண செலவால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியால் விவசாயிகள் தற்கொலை செய்வதாக கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனது மகனின் திருமணத்திற்கு 4 கோடி ரூபாய் செலவு செய்தார். அவர் என்ன தற்கொலையா செய்துகொண்டார்.
 
விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணம் பணம் இல்லாததே. விவசாயிகளின் உற்பத்தை அதிகரித்தாலும் அவர்களின் வருமானம் மட்டும் அதிகரிப்பதில்லை என பச்சு காது பேசினார்.
 
இந்நிலையில் நடிகை ஹேமமாலினி தினமும் மது குடிக்கிறார் என அவர் பேசியது பாஜகவினரிடையை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுயேட்சை எம்எல்ஏ பச்சு காது மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :