Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாணவிகளை அரை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற தலைமை ஆசிரியை


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (20:23 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் வீட்டு பாடம் எழுதாத மாணவிகளை தலைமை ஆசிரியை அரை நிர்வாணமாக ஊர்லவமாக அழைத்துச் சென்றுள்ளார்.

 


உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது. 8ஆம் வகுப்பு மாணவிகள் சிலர் வீட்டு பாடம் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த தலைமை ஆசிரியை மீனா சிங் மாணவிகளை அரை நிர்வாணமாக்கி பள்ளி மைதானத்தில் ஊர்லவமாக வரைவழைத்து உள்ளார்.

அதை அவருடைய மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் நீங்களி வீட்டு பாடம் ஒழுங்காக எழுதி வரவில்லை என்றால் இந்த வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இதையடுத்து தலைமை ஆசிரியை சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடைப்பெற்று வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :