வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 26 அக்டோபர் 2014 (11:33 IST)

ஹரியானா முதலமைச்சராகப் பதவியேற்றார் மனோகர் லால் கட்டார்

ஹரியாணா மாநில முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் பதவியேற்றார், இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள ஹூடா மைதானத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. அங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
ஹரியானா ஆளுநர் கப்டன் சிங், மனோஹர் லால் கட்டருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.