வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (15:08 IST)

மனைவிக்கு கணவன் கொடுக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கிரிமினல் குற்றமாக்க முடியாது - மத்திய அமைச்சர்

திருமணத்துக்குப் பிறகு மனைவிக்கு கணவன் கொடுக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கிரிமினல் குற்றமாக்க முடியாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிரதிபாய் சவுத்ரி கூறியுள்ளார்.
 
மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சவுத்ரி, இந்தியாவில் திருமணம் என்பது புனிதமாகக் கருதப்படுவதால், திருமணத்துக்குப் பிறகு கணவன், மனைவிக்கு கொடுக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கிரிமினல் குற்றமாக மாற்ற சட்ட திருத்தம் மேற்கொள்ள இயலாது என்று எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார்.
 
ஏற்கெனவே இந்தியாவில் 75 சதவீத பெண்கள், திருமணத்துக்குப் பிறகு ஏதோ ஒரு வகையில் கணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.